(U.Name:FI123AP01) (Password:RGOPURAM1@)

 

Login Here

Username:  FI123AP01
Password: RGOPURAM1@

ஷேர்லக்: வங்கி, ஆயில் & கேஸ் பங்குகள்! – குவியும் முதலீடுகள்!

நவம்பர் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள், இந்தியப் பங்குச் சந்தையில் சில துறைகளில்தான் அதிக முதலீடு செய்துள்ளனர்.

ஷேர்லக்

ந்ததும் வராததுமாக நமக்குப் பெரிய பூங்கொத்து ஒன்றைத் தந்தார் ஷேர்லக். ‘‘ `பிசினஸ் ஸ்டார் அவார்ட் 2019’ நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துகள். நீர் நடத்திய விழாவுக்கு வந்திருந்த என் பிசினஸ் உலக நண்பர்கள், விழா ஏற்பாட்டைப் பார்த்துப் பாராட்டு மழை பொழிந்துவிட்டார்கள். வரும் சனிக்கிழமை அன்று இந்த விருது நிகழ்ச்சி, `நியூஸ் 18 தமிழ்நாடு’ சேனலில் ஒளிபரப்பாவதைத் தமிழகம் முழுக்க இருக்கும் தொழில்முனைவோர்கள் பார்த்துப் பயன்பெற வேண்டும் என்பதே என் வேண்டுகோள்’’ என்றவரிடம் நாம் கேள்விகளைக் கேட்க, அவற்றுக்கு அவர் அளித்த பதில்கள்…

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் ரூபாயை எட்டியிருக்கிறதே!

‘‘முகேஷ் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான இதன் பங்கு விலையில் தொடர்ச்சியான ஏற்றம் இருந்ததால், குறுகிய காலத்தில் இந்தச் சாதனை இலக்கை எட்டியுள்ளது. மிகப்பெரும் முன்னணி நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், கோட்டக் பேங்க் மற்றும் எஸ்.பி.ஐ ஆகிய நிறுவனங்களைவிட ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு அடுத்த நிலையிலிருக்கும் அவென்யூ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பைவிட இது நான்கு மடங்கு அதிகம். பட்டியலிடப்படாத பங்குச் சந்தையில் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, கடந்த ஐந்து மாதங்களில் 75% அதிகரித்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.825 ரூபாயிலிருந்து ரூ.850-க்குள் பங்குச் சந்தைக்கு வெளியே கைமாறி வருகிறது.”

கிரிசில், எடெல்வைஸ் மாதிரியான பிரபல ரேட்டிங் நிறுவனங்கள் கணித்திருந்த இந்தியாவின் முழு ஆண்டு ஜி.டி.பி வளர்ச்சிக்கான இலக்கு விகிதத்தைத் தற்போது குறைத்திருக்கின்றன.

கடந்த நவம்பரில் இரண்டு துறைகளில் மட்டும் அந்நிய முதலீடு குவியக் காரணம் என்ன?

‘‘கடந்த நவம்பர் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள், இந்தியப் பங்குச் சந்தையில் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் அதிக முதலீடு செய்திருக்கிறார்கள். வங்கித்துறை, ஆயில் அண்ட் கேஸ் துறைகளில் மட்டுமே ஏறக்குறைய 70% அந்நிய முதலீடுகள் வந்துள்ளன. தற்போதுள்ள மந்தமான பொருளாதாரச் சூழலில் எதிர்காலத்தில் வங்கிப் பங்குகள் நன்கு செயல்படக்கூடும் என்று அந்நிய முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதால், அதில் தங்கள் முதலீடுகளைக் குவித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க்,எஸ்.பி.ஐ மற்றும் கோட்டக் மஹிந்திரா பேங்க் போன்றவற்றின் பங்குகளில் அந்நிய முதலீடுகள் பெருமளவு குவிந்துள்ளன. இந்த வங்கிகளின் டெபாசிட் மற்றும் வங்கிக்கடன் வளர்ச்சி உள்ளிட்ட செயல்பாடுகள் நல்ல முறையில் இருப்பதால், இவற்றை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்வு செய்துள்ளனர். ஆயில் அண்ட் கேஸ் துறையைப் பொறுத்தவரை, பி.பி.சி.எல் நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு மூலதனம் குறைக்கப் படுவதால், அந்நிய முதலீட்டாளர்களுக்கு அந்தத் துறையில் முதலீடு செய்யும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.”

ஷேர்லக்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு இலக்கு விலையை கோல்டுமேன் சாக்ஸ் அதிகரித்திருக்கிறதே?

‘‘கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 12 மாதப் பங்கு இலக்கு விலையை ரூ.1,635-லிருந்து ரூ.1,850-ஆக உயர்த்தியிருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அடுத்த இரண்டு காலண்டு வருமான வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் இலக்கு விலையை உயர்த்தியிருக்கிறது கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம். கட்டண அதிகரிப்புக்குப் பிறகும், தொடர்ச்சியான, அதே நேரம் வலுவான சந்தாதாரர்கள் சேர்க்கை இருப்பதால்,இந்தப் பங்கில் முதலீட்டாளர்களின் கவனம் அதிகரிக்கும். இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 2019-20-ம் நிதியாண்டில் 7 சதவிகிதத்துக்கு அதிகமாகவும், 2020-21-ம் நிதியாண்டில் 20 சதவிகிதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.’’

மகாராஷ்டிராவிலுள்ள உள்கட்டமைப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாமே?

‘‘உத்தவ் தாக்கரேவின் தலைமையில் மகாராஷ்டிராவில் புதிய அமைச்சரவை பதவியேற்றதும் கடந்த ஆட்சியில், கடந்த ஆறு மாதங்களில் ஒப்புதல் தரப்பட்ட உள்கட்டமைப்புத்துறை நிறுவன ஒப்பந்தங்கள் குறித்து மறு ஆய்வு நடத்த உத்தரவிட்டார். மேலும், அந்த மறுஆய்வுப்பணி நிறைவடையும் வரை அவற்றின் பணிகளுக்கான ஊதியம் அளிப்பதை நிறுத்திவைக்கும்படியும் உத்தரவிட்டார். இந்த உத்தரவு காரணமாக உள்கட்டமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் மத்தியில் மீண்டும் ஏலம் விடக்கூடிய சூழல் ஏற்படுமோ என்ற குழப்பம் நிலவுகிறது. எனினும், 85% அளவுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்துவரும் புராஜெக்ட்டுகளுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கருதப் படுகிறது.

ஷேர்லக்

இந்தக் குழப்பங் களால் கடந்த செவ்வாய்க்கிழமை உள்கட்டமைப்புத் துறை திட்டங்களில் பங்கெடுக்கும் ஜே.குமார் இன்ஃப்ரா, கெபாசைட் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ், ஐ.டி.டி சிமென்டேஷன் மற்றும் என்.சி.சி நிறுவனங்களின் பங்கு விலை 5% முதல் 10% வரை குறைந்தது. கெபாசைட் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் 93% பணி ஆர்டர்கள் ஜே.குமார் இன்ஃப்ரா நிறுவனத்தின் 54% பணி ஆர்டர்களும், ஐ.டி.டி சிமென்டேஷன் நிறுவனத்தின் 17% பணி ஆர்டர்களும், ஐ.என்.சி நிறுவனத்தின் 18% பணி ஆர்டர்களும் மகாராஷ்டிராவில் இருக்கின்றன. இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டிருப்பதால், பங்கு விலை சரிவடைந்திருக்கிறது.”

கிரிசில், எடெல்வைஸ் போன்ற ரேட்டிங் நிறுவனங்கள் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தைக் குறைத்து மதிப்பிட்டிருக்கின்றனவே?

‘‘நம் பொருளாதாரம் தொடர்ந்து சரிவின் போக்கில் இருப்பதே அதற்குக் காரணம். பொருளாதாரத்தைச் சீராக்க அரசு நிறைய நடவடிக்கை எடுத்தாலும் இப்போதைக்கு சரிவு நின்றபாடில்லை. இந்த நிலையில் கிரிசில், எடெல்வைஸ் போன்ற பிரபல ரேட்டிங் நிறுவனங்கள், தாங்கள் கணித்திருந்த இந்தியாவின் முழு ஆண்டு ஜி.டி.பி வளர்ச்சிக்கான இலக்கு விகிதத்தைத் தற்போது குறைத்திருக்கின்றன. கிரிசில் நிறுவனம், 2019-20-ம் நிதி ஆண்டுக்கான ஜி.டி.பி வளர்ச்சியை 6.3 சதவிகிதத்திலிருந்து 5.1 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது. எடெல்வைஸ் 5.7 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைத் திருக்கிறது. கேர் ரேட்டிங்ஸ் தனது இலக்கு நிர்ணயத்தை 6.1-6.2 சதவிகிதத் திலி ருந்து 5.5-5.6 சதவிகித மாகக் குறைத்திருக் கிறது.

எஸ்.பி.ஐ 6.8 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இதன் எதிரொலியைத்தான் கடந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தை சந்தித்துவருகிறது” என்றவர், ‘‘அடுத்த சனிக்கிழமை சென்னை கான்க்ளேவில் தலைகாட்டலாம் என்று ஒரு யோசனை இருக்கிறது” என்றவர், ரேஸ் க்ளப்பில் நடக்கும் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ளப் புறப்பட்டார்!

கிளம்பிப் போன பிறகு, ஷேர்லக் அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ்: ‘ஆக்ஸிஸ் வங்கியின் சி.எஃப்.ஓ ஜெய்ராம் ஸ்ரீதரன் திடீர் ராஜினாமா.

நன்றி

நாணய விகடன்

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *