(U.Name:FI123AP01) (Password:RGOPURAM1@)

 

Login Here

Username:  FI123AP01
Password: RGOPURAM1@

ரெப்போ வட்டி, ரிவர்ஸ் வட்டி குறைப்பு… சாமானிய மக்களுக்கு பயனுண்டா?

கடந்த மார்ச் 27-ம் தேதி, ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்ற தகவல் வந்ததும், `நிதி நெருக்கடிக்கு உதவும் விதமாகப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார்’ என மக்களும் பொருளாதார நிபுணர்களும் எதிர்பார்த்தார்கள்.

அனைவரின் எதிர்பார்ப்புகளை, சக்திகாந்த தாஸ் முழுமையாகப் பூர்த்தி செய்யாவிட்டாலும், அன்றைய தினத்தின் ஒரு சில முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அறிவிப்புகளில் வங்கிகளுக்கான ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைத்திருந்தது மிக முக்கியமான ஒன்று. கடந்த 16-ம் தேதி, இரண்டாவது முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் ஒருமுறை குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

 

வீட்டுக்கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் பற்றி தெரியும். அது என்ன ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என நீங்கள் கேட்கிறீர்களா? இதோ, இந்தக் கட்டுரை ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் சார்ந்த அனைத்துச் சந்தேகங்களுக்கும் விடை தருவதாக இருக்கும்.

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *